உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை முன்மொழிந்து, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவுக்கமைய நேற்று (07) வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி,
• உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 67 ஆக உயர்த்துதல்
• மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நிர்ணயித்தல்
• மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கையை 19லிருந்து 24 ஆக அதிகரித்தல்
எனஇந்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


