Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து சாய் சுதர்சன் விலகல்!

ஆவணி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சன் உபாதை காரணமாக விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் இன்னும் முழுமையாகக் குணமடையாத காரணத்தினாலேயே இந்தத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்தியக் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan) அல்லது ஷேக் ரஷீத் (Shaik Rasheed) ஆகிய இருவரில் ஒருவர் இந்திய அணியில் சேர்க்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்ஃபராஸ் கான் ஏற்கனவே பெங்களூரிலுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் மையத்தில் உடற்தகுதிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதேவேளை, அண்மையில் இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட 21 வயதான ஷேக் ரஷீத்தையும் இந்தியத் தெரிவுக்குழு பரிசீலித்து வருகிறது.

சாய் சுதர்சன் விலகியுள்ள நிலையில், தொடக்க ஆட்டத்திற்குப் பிந்தைய 3 ஆம் இலக்கத் துடுப்பாட்ட வரிசையில் தேவ்தத் படிக்கல் களம் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

கிணற்றில் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தை பலி!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை என்பது அனைவருக்குமான நாடு

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் பஸ் விபத்து – கைக்குழந்தை உட்பட 26 பேர் காயம்! ​

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்புக்கு எதிர்ப்பு!

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube