Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்த இலங்கையர்கள் நாடு திரும்ப அனுமதி

ஆவணி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

யுத்தக் காலத்தில் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கையர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்குத் தேவையான குடிவரவு தடைகளை அகற்றும் வசதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யுத்த காலத்தில் நிலவிய சீரற்ற சூழ்நிலை காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் மூலமன்றி முறையான கடவுச்சீட்டின்றி இந்தியாவுக்குச் சென்ற பலர், அங்கு அகதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) ஊடாகத் தன்னார்வமாக மீண்டும் தாயகம் திரும்ப எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இதனடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமையப் பின்வரும் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று, அங்குள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலம் இலங்கையர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்களுக்கு, அரசு உளவுத்துறையின் தடையகற்றல் அறிக்கை பெறப்படும்.

இவர்கள் கொலை, தேசத்துரோகம் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடாதவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்.

அவ்வாறு அனுமதிக்கப்படுகின்ற நபர்களுக்குத் தற்காலிகப் பயண ஆவணங்கள் வழங்கப்பட்டு, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தின் கீழ் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல், அங்கீகரிக்கப்பட்ட வழிகள் ஊடாக நாட்டிற்குள் நுழைவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் யுத்தம் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கும், அடையாளப் படுத்தல் மற்றும் உளவுத்துறை தடையகற்றல் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளின்றி நாட்டிற்குள் நுழையச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

அதேவேளை, கொலை மற்றும் தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் துறைமுகம் அல்லது வானூர்தி நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு விவகாரம் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரியொருவர் கைது!

ஆடி 6, 2026
இலங்கை

2026ல் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு;  பொலிஸ் எச்சரிக்கை!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஒன்று, முன்னால் பயணித்த சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் பலி!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஒற்றுமையின்மையே வலைப்பந்தாட்ட உலகக் கிண்ண வாய்ப்பை இலங்கை இழந்ததற்கான காரணம்

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube