தனமல்வில, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரபிஞ்சலந்த பகுதியில் சட்டவிரோதமாகப் பயிரிடப்பட்டிருந்த பாரிய கஞ்சா தோட்டத்தை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டு அழித்துள்ளனர்.
ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 11,200 நன்கு வளர்ந்த கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அதன் பெறுமதி 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டவிரோதச் செய்கையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ், ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
