திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினரான வெல்லே சாரங்க எனப்படும் சாரங்க பிரதீப் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 ஆண்டுகளுக்கு மேலாக துபாயில் தலைமறைவாக இருந்த இவர், சர்வதேச சிவப்பு எச்சரிக்கையின் (Red Notice) அடிப்படையில் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் கடத்தல், பாதாள உலகக் கொலைச் சம்பவங்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
