யாழ். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் இன்றைய (05) பாராளுமன்ற உரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கச்சத்தீவை தமிழ்நாட்டிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும், தமிழ்நாட்டுப் பொது மக்கள் இலங்கை தமிழர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குவார்கள் எனவும் தனது பாராளுமன்ற உரையின் போது குறிப்பிட்டிருந்தார்.
மேலும் த.வெ.க தலைவர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்களையும் தெரிவித்த அவர், விஜய் கச்சாத்தீவை கோரும்போது, அதனை சம்மதிக்க முடியாது என்று ஜனாதிபதி அனுரா குமார திச்ஸநாயக்க கூறியதை அவர் நினைவுபடுத்தினார், : “கச்சாத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் எங்களை பாதுகாப்பார்கள் ” எனவும் குறிப்பிட்டார்.
