Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறை திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

#இலங்கைவாளுமன்றம் #இலங்கைமின்சாரம் #மின்சாரதிருத்தச்சட்டமூலம் #சட்டமூலம் #96மேலதிகவாக்குகள் #பாராளுமன்றம் #SriLankaParliament #ElectricityAmendmentBill #SriLanka #Parliament

புரட்டாதி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று (25) பாராளுமன்றில் திருத்தங்கள் ஏதுமின்றி 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

 

இதன்போது, இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

 

இதற்கமைய, நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு திருத்தங்கள் இன்றி 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

 

அதேநேரம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு திருத்தங்களுடன் விசேட பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. (update – 19.48 pm)

 

————————————————————————————————————————————————————–

 

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

பாராளுமன்றில் இன்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் போதான வாக்கெடுப்பின் போது, குறித்த திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்தின் சரத்துகளை சவாலுக்கு உட்படுத்தி பல மனுக்களும், அதற்கு ஆதரவு தெரிவித்து இடையீட்டு மனுக்கள் உட்பட பல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை கடந்த செவ்வாய்க்கிழமை (22) சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

இதன்படி, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் இல்லை என உயர்நீதிமன்றம் அறிவித்தது.

அதற்கமைய, குறித்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் நேற்றும் (24) இன்றும் (25) நடைபெற்றது.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான வாக்களிப்பு இன்று (25) இரவு 07.15 மணியளவில் இடம்பெற்றது.

 

UPDATE – 22 வது திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டனில் வயோதிப தம்பதியினர் கொலை

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன்!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மழைக்கால நிலைமை தொடர்ந்து நீடிக்கும்!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் பேருந்தில் சிக்கி ஆசிரியை பலி

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube