களுத்துறை – நாகொடை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (09) காலை உணவகம் ஒன்றின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த உணவக உரிமையாளரின் மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (09) காலை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், உணவகத்திற்கு வெளியே நின்றிருந்த உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த அவரது மனைவி நாகொடை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் டொங்கொடை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுத்துறை தெற்குப் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
