சவூதி அரேபியாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கொழும்புக்கும் டம்மாமுக்கும் இடையிலான சில விமானச் சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரத்துச் செய்துள்ளது.
விமான நிறுவனத்தின் அறிவிப்பின்படி, ஒக்டோபர் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இயக்கப்படவிருந்த UL253 மற்றும் UL254 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் ரியாத் நகருக்கான விமானச் சேவைகளும் அடுத்த வாரம் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மாற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய பயணிகள், விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர் தங்களது பயண நேரம் மற்றும் விமான நிலவரத்தை விமான நிறுவனத்திடம் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
சவூதி அரேபியாவுக்கான அடுத்தடுத்த விமானச் சேவைகள் தொடர்பில் மேலதிக அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
