திடீர் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 50 சதவீதமான பகுதிகளில் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (தனியார்) நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின் பரிமாற்ற வலையமைப்பில் ஏற்பட்ட பிரதான கட்டமைப்புத் கோளாறு காரணமாக இன்று சனிக்கிழமை (17) முற்பகல் 11.45 மணியளவில் நாடு தழுவிய ரீதியில் மின்சாரத் தடை ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மின் விநியோகத்தை இன்று மாலைக்குள் சீரமைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், இன்று மாலை 6.30 மணியளவில் நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரக் கட்டமைப்பும் முழுமையாக இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்படும் என்றும் அக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சில மின்னுற்பத்தி நிலையங்களின் மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வழக்கமான நடைமுறைகளின்படி நிலக்கரி மின் நிலையம் மட்டுமே தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
