மாத்தளை – கண்டி பிரதான வீதியின் அக்குரணை, குருகொடை சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால், வீதியில் பயணித்த வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அக்குரணை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சுமார் எட்டு வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை அலவத்துவலை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
