Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் பெருமளவு போதைப்பொருள் மீட்பு

#கொழும்பு #போதைப்பொருள் #போதைப்பொருள்_மீட்பு #இலங்கை_செய்திகள் #கொழும்பு_செய்திகள் #SriLankaNews #ColomboNews #DrugBust #DrugSeizure #BreakingNews #LatestNews #TamilNews #SriLankaTamilNews #PostalService #NewsUpdate

அக்டோபர் 20, 2026
படிக்க 2 நிமிடங்கள்

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையொன்றின் போது, 67.53 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையினை இலங்கைச் சுங்கப் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

வெளிநாடுகள் பலவற்றில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 11 வெளிநாட்டுத் தபால் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தப் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் தபால் பொருட்களைப் பரிசோதித்தபோது, சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளினால் இந்தச் சந்தேகத்திற்கிடமான பொதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

 

பின்னர் உரிய முகவரிகளின் உரிமையாளர்கள் வந்து அதைப் பெற்றுக்கொள்ளும் வரை அவற்றைத் தடுத்து வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு யாரும் வராத காரணத்தினால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் முன்னிலையில் அவற்றைத் திறந்து பரிசோதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 

அதற்கமைய, இன்று (19) சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து மத்திய தபால் பரிமாற்றகத்தில் இந்த 11 பொதிகளையும் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

 

இதன்போது தாய்லாந்து, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்தே இந்தப் பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 

தாய்லாந்து, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொதிகளுக்குள் இருந்து 30.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்பிடப்பட்ட சந்தைப் பெறுமதியைக் கொண்ட 3 கிலோ கிராம்களுக்கும் அதிகமான குஷ் தொகையினை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

 

மேலதிகமாக, பெல்ஜியம், பிரான்ஸ், கனடா மற்றும் ஜேர்மனியிலிருந்து அனுப்பப்பட்ட பொதிகளில் இருந்து 2,395 கிராம் MDMA மாத்திரைகளும், நெதர்லாந்தில் இருந்து அனுப்பப்பட்ட பொதியொன்றில் இருந்து மெண்டி (Mandy) போதைப்பொருள் 33 கிராம்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

இங்கு பிடிபட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகப் பெல்ஜியத்தில் இருந்து அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சுமார் 33.03 மில்லியன் ரூபா பெறுமதியான 2,200 கிராம் MDMA மாத்திரைத்தொகை காணப்படுகின்றது.

 

மத்திய தபால் பரிமாற்றகத்தில் ஆரம்பக் கட்டப் பரிசோதனைகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்கும் நீதிமன்ற ஊடாகச் சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் பொறுப்பில் எடுக்கப்பட்ட போதைப்பொருட்களை இலங்கைச் சுங்க அதிகாரிகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

லாஃப் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து 11 ஆம் திகதி போராட்டம்!

மே 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மெகசின் சிறைச்சாலை மோதல் – சிறை அதிகாரிகளின் திட்டமிட்ட தாக்குதல் !

ஆகஸ்ட் 14, 2026
Breaking Newsஇலங்கை

28 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது!

அக்டோபர் 18, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் மாணவர் போராட்டம் தீவிரம்!

ஜூலை 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube