பிரான்ஸின் பாரிஸ், மார்சேய், லியோன், லிமோஜ் உள்ளிட்ட பல நகரங்களில் கலவரங்கள் வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் பகுதிநேர ஊரடங்கு உத்தரவும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், கலவரங்களைக் கட்டுப்படுத்தவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் 2,400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்சில் வெடித்த கலவரங்கள் – ஊரடங்கு உத்தரவு அமுல்
#பிரான்ஸ் #பிரான்ஸ்கலவரம் #கலவரம் #கைது #உலகசெய்திகள் #FranceRiots #FranceNews #MassArrests #BreakingNews #WorldNews
செய்தியை பகிர்ந்து கொள்ள