எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டங்களை எதிர்கொள்ள, பொலிஸாருடன் இராணுவத்தினரையும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தவுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த வார இறுதியில் பாரிஸ், மார்செய், லியோன் உள்ளிட்ட நகரங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமை என்றும் பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், லிமோஜஸ் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபத்துக்குத் தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாதுகாப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தீவிர இடதுசாரிக் குழுவொன்றுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
