அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்ததாகக் கூறப்படும் கோரிக்கையை கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை ‘ட்ரம்ப் பெருங்கடல்’ என மாற்றுமாறு ட்ரம்ப் கோரிக்கை விடுத்ததாகவும், அதனை சுந்தர் பிச்சை ஏற்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நோபல் பரிசு தொடர்பாக ட்ரம்ப் பலமுறை தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்தப் பெயர் மாற்றக் கோரிக்கை குறித்த தகவலும் தற்போது கவனம் பெற்றுள்ளது.
