Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்வித்துறைக்கு திறமையான மனிதவளத்தை இணைக்க புதிய வேலைத்திட்டம் – பிரதமர் ஹரிணி

அக்டோபர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உயர்ந்த தகுதிகளும் திறமைகளும் கொண்ட மனிதவளத்தை கல்வி அமைப்பில் இணைத்துக்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டமொன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கடவலவெவ மகா வித்தியாலய மாணவர்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

May be an image of child and studying

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான எட்டு வகுப்பறைகளைக் கொண்ட இந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் சுமார் 55 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது.

இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம், அறிவு, திறன்கள் மற்றும் நற்பண்புகள் நிறைந்த முழுமையான குடிமக்களை உருவாக்குவதாகும் எனப் பிரதமர் தெரிவித்தார்.

May be an image of child and text

மாணவர்களைப் பரீட்சைகளுக்குத் தயார்படுத்துவது மட்டுமே கல்வியின் நோக்கமல்ல எனக் குறிப்பிட்ட அவர், சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் தங்களது அறிவைப் பயன்படுத்தக்கூடிய தலைமுறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு என வலியுறுத்தினார்.

இதற்காகப் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 2027ஆம் ஆண்டில் கல்வித்துறையின் மாற்றத்திற்காகக் கணிசமான முதலீட்டை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

May be an image of one or more people

நீண்டகாலமாகத் தாமதமடைந்திருந்த ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், கல்வி முறையை வலுப்படுத்துவதில் தகுதி மற்றும் தனிநபர் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் கூறினார்.

மாணவர்களின் கல்வி தொடர்பில் பெற்றோர் சுமக்கும் பொறுப்பில் ஒரு பகுதியை அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், மாணவர்களின் திறமைகளை வளர்த்து, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்குப் பங்களிக்கத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்துவதே கல்விச் சீர்திருத்தங்களின் மற்றொரு முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.

May be an image of one or more people and text

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா தனியார் தாதியர் கல்லூரி சர்ச்சை: 5 பேர் கைது

ஜூன் 16, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக திலக் வர்மாவை அணியில் இணைக்க தேர்வுக்குழு பரிசீலனை

ஆகஸ்ட் 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

மலைநாட்டில் அடைமழை – கண்டி விக்டோரியா நீர்த்தேக்கம் வற்றிய நிலையில் காட்சி!

மே 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

டைம்ஸ் சதுக்கத்தில் கத்திக்குத்து மேற்கொண்ட பெண் மீது அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு

செப்டம்பர் 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube