கிரிந்த கடற்கரையில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் சுமார் 60 முதல் 70 வயதிற்குட்பட்டவர் எனவும், சுமார் 5 அடி உயரமும், கருமை நிற தோலும், நடுத்தர உடல் அமைப்பும் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது தெபரவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் கிரிந்த பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
