Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் தயாளினி திலீபன் மரணத்தில் வெளிவந்த உண்மை!

death|Dayalini |Thileepan|Jaffna

வைகாசி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது.
விசாரணையின் போது உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் காவல்துறையினரும் சாட்சியம் வழங்கினர்.
சாட்சியமளித்த காவல்துறையினர், விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையே என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் சந்தேகம் நிலவுவதாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இருவரின் மரண விசாரணைகளையும் தொடர்ந்து வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகளின் விளக்கமறியலை அன்றைய தினம் வரை நீடித்து உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைகளின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் வழிகாட்டலில் சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் முன்னிலையானார்.
முதலாவது சந்தேகநபரான மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் முன்னிலையாகியதுடன், இரண்டாவது சந்தேகநபரான மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணியும் முன்னிலையாகினார்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர் உழைப்பிற்கு எதிரான சர்வதேச தினம் – ஜூன் 12!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சலே, கடவுச்சொற்களை வழங்காமைக்கான காரணங்களை வௌிப்படுத்திய கம்மன்பில

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 444 என்புகூடுகள் முழுமையாக அகழ்வு

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவிலான போதைப்பொருளுடன் இருவர் கைது!

வைகாசி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube