Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Uncategorizedஇலங்கை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் பெருவிழா!

ஆனி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஈழத் தமிழர்களின் ஆன்மீக வரலாற்றில் மிக முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா நேற்று ஜூன் 01, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ மிக விமர்சையாக நடைபெற்றது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பிரதான சிறப்பம்சமான, முல்லைத்தீவு சிலாவத்தை நந்திக்கடல் கடற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட கடல்நீரைக் கொண்டு (தீர்த்தம்) காட்டாறு விநாயகர் ஆலயத்தில் கடந்த ஒரு வார காலமாக விளக்கேற்றப்பட்டு விசேட வழிபாடுகள் நடத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு காட்டாறு விநாயகர் ஆலயத்திலிருந்து மடப் பண்டங்கள் மற்றும் தீர்த்தக் குடங்கள் பாரம்பரிய முறைப்படி, மேள தாள வாத்தியங்கள் முழங்க, பக்தி கோஷங்களுடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

நேற்று அதிகாலை முதல் நாட்டின் பல பாகங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்குப் பொங்கலிட்டுத் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

ஆலய சூழலில் கற்பூரச் சட்டி ஏந்துதல், அடி அழித்தல், மடிப் பிச்சை, தூக்கு காவடி ,பறவை காவடி தீபாவளி எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களைப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் நிறைவேற்றி நிறைவேற்றினார்கள்

வைகாசி மாதத்தின் முதல் திங்கட்கிழமையான நேற்று, பக்திப் பெருக்குடன் ஆரம்பமாகிய இப்பொங்கல் வழிபாடுகள் நேற்று (01) நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெற்று நிறைவடைந்தது!

ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – ரஜீவ் அமரசூரிய

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றுமுதல் மீண்டும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்!

ஆனி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்து ஐஸ்லாந்தில் பொது வாக்கெடுப்பு

ஆவணி 30, 2026
இலங்கை

பொலிஸ் நிதியிலிருந்து பணம் திருடிய பொலிஸ் கைது

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube