Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணாமல் போன மீனவர்கள்: தேடுதல் தீவிரம்!

ramalingam|fisherman|quicktamilnews

ஆனி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 27 ஆம் திகதி  இரவு சுமார் 11 மணியளவில் இரண்டு படகுகளில் கடலுக்கு சென்ற குறித்த மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் நேற்று முதல் கடுமையான காற்று வீசிவருவதால், அவர்கள் பயணித்த படகுகள் கரைக்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் பிரதேச மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலை தொடர்பாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  கவனத்திற்கு தகவல் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அமைச்சர் உடனடியாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகமிடம் தொடர்பு கொண்டு தேடுதல் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், இன்று அதிகாலை விமானப்படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தியும் கடற்பரப்பில் விரிவான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், அண்டை நாடுகளின் கடற் பாதுகாப்பு பிரிவுகளுக்கும் காணாமல் போன மீனவர்கள் தொடர்பான தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச மட்டத்திலும் தேடுதல் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

காணாமல் போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என கடற்படையினருக்கும், சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அமைச்சர் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு!

ஆடி 12, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மோட்டார் வாகன விபத்துக்களை துல்லியமாக கண்டறிய நவீன கெமரா

ஆவணி 2, 2026
இலங்கைஎங்கள் ஊர்

தாமிர செம்பு மற்றும் ரத்தினக்கற்களுடன் ஒருவர் கைது!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் பதவி பறிக்கப்படுமா?

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube