Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீதியில் பயணித்தவர்கள் மீது காரொன்று மோதியதில் இரு இளைஞர்கள் பலி!

ஆனி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் புதல்வன் உட்பட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நேற்று (02) இரவு இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் கனகராயன்குளம் பெரியகுளம் பகுதிக்கு அருகில் வீதியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது சொகுசு கார் மோதியதில் இரு இளைஞர்களும், படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை விபத்துக்குள்ளான சொகுசு காரின் பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் புதல்வனான அட்புதராஜா தர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர்களின் உடல்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இவ்விபத்து தொடர்பாக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸாரால் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு தொடர்பான விசேட கூட்டம் நாளை பாராளுமன்றத்தில்

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்பம்!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பளையில் வீதியில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!

வைகாசி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube