ஹொரண மத்திய வங்கியில் மூன்றரை கோடி ரூபாவை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் குறித்த வங்கியில் பணியாற்றிய உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி என தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் (3) மாலை 2.55க்கு வங்கி ஊழியர் ஒருவரினால் வங்கி ATM இயந்திரத்திற்கு பணத்தை வைப்பிலிடுவதற்காக எடுத்துச் சென்ற 3.5 கோடி ரூபா பணத்தைக் கொண்ட இரு பைகளை அங்கு வந்த நபர் ஒருவர் இந்த இரு பணப் பைகளையும் பலவந்தமாக கொள்ளையிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
