ஜூன் 05ஆம் திகதி இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் குருநாகல் பிராந்திய நிலையத்துக்கு விஜயம் செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அங்குள்ள விரிவுரையாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இந்த கலந்துரையாடலில், குருநாகல் கிளையில் நீண்ட காலமாக நிலவி வரும் இடவசதி பற்றாக்குறை, விரிவுரை மண்டபங்களின் குறைவு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.
மாணவர்களும் விரிவுரையாளர்களும் எதிர்நோக்கும் இவ்வாறான முக்கிய பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வுகளை வழங்குவது தொடர்பாக பிரதமர் அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
