Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

இரு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

ஆனி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மாளிகாவில – ஒக்கம்பிட்டிய, ஜோதியமுன பகுதி விவசாய நிலப்பரப்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலி ஒன்றில் சிக்கி, இரண்டு காட்டுயானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

லங்காதீப செய்தி அறிக்கையின்படி, கரும்பு, பப்பாளி, வாழை மற்றும் நெல் பயிர்களை காட்டு விலங்குகளிலிருந்து பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் நேரடி மின்கம்பியைத் தொட்ந்ததையடுத்து யானைகள் உடனடியாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யானைகள் சுமார் 20 வயது மதிக்கத்தக்க, சுமார் ஆறு அடி உயரமுள்ள ஒரு முதிர்ந்த யானையும், சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க நான்கு அடி உயரமுள்ள குட்டி யானையும் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

சம்பவத்தையடுத்து, அந்த நிலப்பகுதியை பராமரித்து வந்த ஒருவர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மின்வேலி அமைக்கப்பட்டிருந்த நிலத்தின் உரிமையாளர் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஒக்கம்பிட்டிய பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நில உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேவின் உடல் நிலை குறித்து அறிக்கை கோரியது நீதிமன்றம்

புரட்டாதி 2, 2026
இலங்கை

160ஆவது பொலிஸ் தினம்

புரட்டாதி 3, 2026
இலங்கைஎங்கள் ஊர்

புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி நிர்வாகத்தின் அசமந்தப் போக்கால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள்!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

ஆடி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube