Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவானிலை

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

ஆனி 28, 2026
படிக்க 2 நிமிடங்கள்

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். இப்பிரதேசங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை காணப்படும். காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

  • காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

  • கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

  • தீவைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அளவில் கொந்தளிப்பாகக் காணப்படும்.

 

சிலாபம் முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 3.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. பேருவளை முதல் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் கடல் அலைகள் நிலப்பரப்புக்குள் ஊடுருவக்கூடிய சாத்தியமும் உள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் காலங்களில் அக் கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், அப் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: தந்தை நஞ்சருந்தி உயிரிழப்பு

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“முழு நாடுமே ஒன்றாக” என்ற செயற்திட்டத்தினூடாக 748 பேர் போதைப்பொருளுடன் கைது!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது!

சித்திரை 26, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி அதிபர் உயிரிழப்பு!

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube