நேற்று 29ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளைத் திருத்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இதுவரை 434 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 92 ஒக்டேன் பெற்றோல், புதிய விலையாக 414 ரூபாவுக்கு வழங்கப்படும்.
அதேவேளை, ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையும் 25 ரூபாவால்குறைக்கப்படவுள்ளது. இதற்கு முன்னர் 407 ரூபாவாக இருந்த ஓட்டோ டீசல், நள்ளிரவு முதல் 382 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
எனினும், ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
