Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய மகளிர் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு!

ஆடி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழுவின் தலைவி உள்ளிட்ட ஆணையாளர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை (03) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது, 2024ஆம் ஆண்டின் 37ஆம் இலக்கப் பெண்களை வலுவூட்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இத்தூதுக்குழுவினர் பிரதமருக்கு விளக்கமளித்ததோடு, பெண்களின் உரிமைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல், முன்னோக்கி எடுத்துச் செல்லுதல் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான தேசிய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இலங்கையில் நிறுவப்பட்ட முதலாவது சுயாதீன சட்டரீதியான நிறுவனம் இந்த தேசிய மகளிர் ஆணைக்குழுவாகும் என்பதை பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஆணைக்குழு இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டியதோடு, இலங்கையில் பெண்களின் உரிமைகள், பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுதல் ஆகியன தொடர்பில் ஆணைக்குழு முன்னின்று உழைப்பதைப் பாராட்டித் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஆணைக்குழுவின் தலைவி கிரேஸ் ஆசீர்வாதம், ஆணையாளர்களான ஜெயந்தி குருஉதும்பால, ஜனஹா செல்வராஜ், கலாநிதி பத்மா குணரத்ன, எம்.யு. கயானி மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.டி.ஆர். ஒல்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பௌத்த சாசன சீரழிவைத் தடுக்க தேவாலயங்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்கள் அவசியம்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் குறைப்பு!

ஆடி 4, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் சந்திப்பு – 7 உடன்படிக்கைகள் கைச்சாத்து!

வைகாசி 4, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் மாணவர் போராட்டம் தீவிரம்!

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube