தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்றும் (05) நாளையும்(06) நடாத்த திட்டமிட்டுள்ளது.

பாடசாலையின் 96 வது கல்லூரி தினத்தை முன்னிட்டு இந்த மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியை பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

பாடசாலயின் அதிபர் திரு பெரியநாயகம் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு கொட்டக்கலை பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

முதல் நிகழ்வாக இன்று (05) காலை 8.30 மணிக்கு பாடசாலையின் பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து வெற்றி கேடயங்கள் வாகன பேரணியின் ஊடாக பழைய மாணவர்களால் தலவாக்கலை நகரூடாக கொட்டக்கலை பிரதேச சபை விளையாட்டு மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது .

அதனைத் தொடர்ந்து பாடசாலையில் முன்னாள் அதிபர்கள் மற்றும் தற்போதைய அதிபர் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் , நிர்வாகக் குழு உறுப்பினர்கள், விளையாட்டு போட்டியின் ஏற்பாட்டு குழு ஆகியோரால் வெற்றிக் கேடயங்கள் மைதானத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.

இப்பாடசாலையில் இருந்து வெளியேறிய 28 வருட அணிகள் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றன . பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக பழையமானவர்களின் விளையாட்டு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
