ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளுர் நேரப்படி இன்று காலை 5.24 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவானதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்திற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும், வலுவான நில அதிர்வுகள் ஏற்பட்ட பகுதிகளில் பாறைச்சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகளின் அபாயம் அதிகரித்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் கடந்த 20ஆம் திகதி 7.5 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்து பல மாகாணங்களுக்கு ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
