தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களை உற்சாகப்படுத்தவும், சுற்றுச்சூழல் மற்றும் பெண் அதிகாரத்துவத்தை வலியுறுத்தவும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அதிரடியான மாற்றங்களைச் செய்துள்ளது.
குறிப்பாக ‘பசுமை வாக்குச்சாவடி’ மற்றும் ‘பிங்க் வாக்குச்சாவடி’ ஆகியவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.
செயற்கை தோரணங்களுக்குப் பதில் தென்னை ஓலைகள், மாவிலை தோரணங்கள் மற்றும் மூங்கில் தடுப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பெண் வாக்காளர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், அவர்களைக் கௌரவிக்கவும் பிரத்யேகமாக இந்த ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி முழுவதும் இளஞ்சிவப்பு (Pink) நிறத் துணிகள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு, ஒரு திருவிழா கோலத்தைக் கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
