Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவியில் இருந்து விலகியமைக்கான காரணம் உண்மைக்காரணம் என்ன ? – ரணில் விசக்ரமசிங்க

Former President | Ranil Wickramasinghe | G. L. Peiris | Kumara Jayakodi | Srilanka | Quick Tamil News

சித்திரை 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சத்திரசிகிச்சையின் பின்னர் நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போது மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார். ஓய்வில் இருக்கும் போதிலும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக அவர் தனது நெருக்கமான அரசியல் சகாக்களை அழைத்து கலந்துரையாடியுள்ளார்.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரை அழைத்து அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவியில் இருந்து விலகியமைக்கான உண்மைப் பின்னணியை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ரணில் இதன்போது வலியுறுத்தியுள்ளார் . பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடுமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு எத்தனை பேர் ஆலோசனை வழங்குகிறார்கள் என ரணில் இதன்போது கேள்வி எழுப்பினார். ஒரு பக்கம் அரசாங்கம் எரான் விக்கிரமரத்னவை கொண்டுவர முயற்சிக்கிறார்கள், மறுபுறம் ஹர்ஷ டி சில்வாவிடம் ஆலோசனை பெறுவதாகக் கூறப்படுகிறது.

எரான் விக்கிரமரத்னவை இவ்வாறான பதவிகளுக்குக் கொண்டுவருவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியினரிடையே பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த கொடுக்கல் வாங்கல்களுக்குப் பின்னால் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டு மக்களுக்கு உண்மை நிலைமையை தெரியப்படுத்த வேண்டும். அரசாங்கத்திற்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுக்களை மூடிமறைக்க அரசாங்கம் இன்னோரன்ன செயல்களை செய்து வருகிறது. வாக்களித்த மக்களை முட்டாள்களாக்கவே அரசாங்கம் முற்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சி இதற்கு எதிராக வலுவாக செயல்பட வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

மயிலத்தமடு–மாதவணைப் பகுதியில்  குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு குற்றச்சாட்டுகள்!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மிரிஸ்ஸவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

ஆவணி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் குழந்தைகள், சிறுவர்களின் என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீகொடை தானசாலை விபத்து – வாகன உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube