Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு-கரடியனாற்றில் சட்டவிரோத உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

வைகாசி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெருவெளி வயல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரடியனாறு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் பெருவெளி வயல் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக கொட்டகை ஒன்று முற்றுகையிடப்பட்டது.

இதன்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய ரக உள்நாட்டுத் தயாரிப்புத் துப்பாக்கி ஒன்றினை பொலிஸார் மீட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

சட்டவிரோதமான முறையில் ஆயுதத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

​மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வுவயது நீட்டிப்பு: எதிர்க்கட்சிகள் அவசர ஆலோசனை!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்பம்!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருநகர் கடற்பரப்பில் காணாமல் போன ஒருவர் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் சடலமாக மீட்பு!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரகீத் எக்னலிகொட வழக்கு: சாட்சியை மீண்டும் விசாரிக்க அனுமதி!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube