Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைப்பு!

ஆனி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கலந்து கொண்டு மீனவர்களுக்கான படகுகள் மற்றும் வலைகளை வழங்கி வைத்தார்.

இதன்போது முதலாம் கட்டமாக ரூபா 1.800 மில்லியன் பெறுமதியான 32 வலைகளும், ரூபா 8.640 மில்லியன் பெறுமதியான 18 படகுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில், தலா ரூபா 480,000.00 பெறுமதியான 18 படகுகளில், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 03 படகுகளும், நெடுந்தீவிற்கு 02 படகுகளும், காரைநகருக்கு ஒரு படகும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13 படகுகளும், மன்னார் மாவட்டத்திற்கு 02 படகுகளுமாக வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன், காரைநகர் பிரதேச செயலாளர் நிரஞ்சனா நவரத்தினம், காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை பணிப்பாளர் திரு.றோகன, சீ நோர் படகுதிருத்தும் நிறுவனத்தின் தலைவர் திரு. வசந்தமானபெரும, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. அகிலன், முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. சுதாகர், மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. ரமேஸ்கண்ணா, திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

க.கிஷாந்தன்
ஊடக செயலாளர்,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

Breaking Newsஇந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

சித்திரை 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கனடாவில் 46 மில்லியன் டொலர் லாட்டரி பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி

வைகாசி 20, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இந்திய ஏ அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்திய இலங்கை ஏ அணி !

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் விபத்து – இளைஞர் ஒருவர் காயம்!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube