மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படும் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா, 2027 ஐபிஎல் தொடருக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இணையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹர்திக் பாண்டியாவை இணைத்துக்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணிகள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தான் இணையும் அணியில் அணித்தலைவர் பதவியை ஹர்திக் எதிர்பார்ப்பதாக கூறப்படுவதால், சிஎஸ்கே அணியின் நிர்வாகத்துக்கு சவால் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ருதுராஜ் கெய்க்வாட் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமை மாற்றம் தொடர்பில் நிர்வாகம் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
எம்.எஸ். தோனி தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே ஹர்திக் – சிஎஸ்கே ஒப்பந்தம் சாத்தியமாகும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
