Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஏமன் இராணுவத்தின் மீது தாக்குதல் : 30 பேர் பலி

ஆவணி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2014-ம் ஆண்டு ஏமனின் முன்னாள் அதிபர் அப்த்ரப்பூ மன்சூர் ஹாதி (Abdrabbuh Mansur Hadi) அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றியதுடன் அந்நாட்டின் தலைநகரான சனாவை (Sanaa) ஹவுதி கிளர்ச்சிக் குழு கைப்பற்றியது. அன்றிலிருந்து, சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசுக்கும் ஈரான் ஆதரவு ஹவுதி படைக்கு இடையே உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது.

எனினும், 2022-ஆம் ஆண்டு இரு தரப்புக்கும் இடையே அமுலுக்கு வந்த போர் நிறுத்தத்திற்குப் பிறகு, பெரிய அளவிலான தாக்குதல்கள் நடைபெறவில்லை. இந்தச் சூழலில், ஹவுதி கிளர்ச்சிப் படையினர் நடத்திய இந்தத் தாக்குதல், ஏமனில் மீண்டும் உள்நாட்டுப் போரின் பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

மாரிப் (Marib) மற்றும் ஹத்ரமவுத் (Hadramout) மாகாணங்களில் உள்ள அரசின் இராணுவ முகாம்கள் மீது ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கி மூலம் ஹவுதிப் படைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும்,
இந்த தாக்குதலில் 40 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதேசமயம், இந்தத் தாக்குதல் குறித்து தெரிவித்துள்ள ஹவுதி கிளர்ச்சிக் குழுவின் இராணுவ செய்தியாளர் யஹ்யா சரீ (Yahya Saree), ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு நடத்திய இந்தத் தாக்குதலில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர் எனத் தெரிவித்திருக்கிறார்.

ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து செங்கடல் பகுதியில் கடற்படை முற்றுகையை ஹவுதி தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

காத்தான்குடியில் கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து இளைஞர் உயிரிழப்பு!

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்; துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிக்கு நீதி அமைச்சர் ஆதரவு!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

8 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!

ஆடி 9, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தலவாக்கலை அஞ்சல் அலுவலக சேவை தாமதம்; மக்கள் அதிருப்தி!

ஆடி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube