Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்

ஆவணி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய, 5 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுருத்தலுக்கமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார விசேட பணியகத்திலிருந்து கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும், தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் சப்பிரகமுவ மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, அப்பதவிக்கு மேலதிகமாக பயிற்சி மற்றும் உயர் பயிற்சிப் பிரிவுக்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். விசேட பாதுகாப்புப் பதவியிலிருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பி. கருணாநாயக்க அப்பதவியிலிருந்து வட மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய புத்திக சிறிவர்தன தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், 6 உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர்களுக்கும் இடமாற்றங்களை வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றிய உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் நாமல் பெரேரா அப்பதவியிலிருந்து பொலிஸ் களப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி இடமாற்றங்கள் சேவைத் தேவைக் கருதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உடவளவை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று 13 மணிநேர நீர்வெட்டு!

ஆனி 17, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

AIக்கு இணைய அணுகல் கிடைத்தால் ஏற்படும் மாற்றம்

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கணவன் மனைவி தகராறு – படுகொலை செய்யப்பட்ட கணவன்!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் எல்நினோ விழிப்புணர்வு கூட்டம்

ஆடி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube