Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் வீடுகளை வாடகைக்கு பெறுவதிலும் சொத்துக்களை வாங்குவதிலும் மக்கள் சிரமம் – இராதாகிருஷ்ணன்

அக்டோபர் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பின் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை உள்ளிட்ட பகுதிகளில் சீனப் பிரஜைகளின் அதிகளவிலான வருகை மற்றும் சொத்துக் கொள்வனவுகள் காரணமாக, உள்ளூர் மக்களால் வீடுகளை வாடகைக்கு பெறுவதிலும் சொத்துக்களை வாங்குவதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்ந்த பல தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது துறைமுக நகரத் திட்டத்தின் ஊடாக சீனப் பிரஜைகளின் வருகை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை போன்ற பகுதிகளில் அதிக விலைக்கு சொத்துக்களை வாங்குவதற்குச் சிலர் தயாராக இருப்பதால், உள்ளூர் மக்களுக்குப் போட்டியிடுவது கடினமாகியுள்ளதாக அவர் கூறினார். இதன் காரணமாக வீடுகளை வாடகைக்கு பெறுவதிலும் சாதாரண வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களைக்கூட மூன்று இலட்சம் ரூபாய் வரை கொடுத்து வாங்குவதற்குச் சிலர் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய நிலைமை தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் சொத்துக் கொள்வனவு வாய்ப்புகளையும் பாதிக்கக்கூடும் எனத் தெரிவித்தார்.

வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கைக்கு வருவதற்கும் தமது வர்த்தகங்களை விரிவுபடுத்துவதற்கும் எதிர்ப்பில்லை எனக் குறிப்பிட்ட இராதாகிருஷ்ணன், அதேவேளை இலங்கையில் வாழும் மூவின மக்களும் தமது சொந்த நாட்டில் உரிமையுடன் வாழ்வதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம், குடியிருப்பு மற்றும் சொத்துக் கொள்வனவு தொடர்பான சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ.109.9 மில்லியன் கொக்கெய்ன் பறிமுதல்!

ஜூலை 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஜோர்டானில் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு – 7 பேர் உயிரிழப்பு, 34 பேர் காயம்!

அக்டோபர் 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெல்லன்வில “அனுபுதூ வந்தனா” பொசன் மண்டலம் பிரதமரின் தலைமையில் ஆரம்பமானது!

ஜூன் 30, 2026
Breaking Newsஇலங்கை

மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

ஆகஸ்ட் 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube