புத்தளம் – மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பல பகுதியில் இடம்பெற்ற டிராக்டர் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (01) தென்னைத் தோட்டம் ஒன்றில் இயக்கப்பட்டு வந்த டிராக்டர், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்கால் ஒன்றில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த சாரதி, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
