மலைநாட்டில் பல பகுதிகளில் மழைபெய்துவரும் நிலையில் புகையுடன் கூடிய பனிமூட்டமான காலநிலையும் காணப்படுகின்றது. இந்த நிலையில் கொஸ்லாந்த பகுதியில் பெய்துவரும் கனமழையின் காரணமாக, இன்று மாலை சுமார் 5 மணியளவில் பெரகல-வெல்லவாய சாலையின் நக்கதியா பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது.
கொஸ்லாந்த பொலிசார் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலையகப்பகுதிளில் வாகனங்களை செலுத்துவோர் பாதுகாப்பாகவும் விழிப்புணர்வோடும் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
