Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொழில் முயற்சியாளர்கள் “இங்குபேசன்” நிலையத்தினை உபயோகிக்க வேண்டும் – சுனில் ஹந்துன்நெத்தி

ஆனி 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்

கிழக்கு மாகாணத்தில் தொழில்முனைவு, புதுமை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான இங்குபேசன் நிலையத்தை தொழில் முயற்சியாளர்கள் முழுமையாக உபயோகிக்க வேண்டும் என தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகம் விஞ்ஞான தொழில் நுட்ப பீடம், தொழில்நுட்ப பூங்காவில் சேவை மற்றும் உதவி மத்திய நிலையம் இன்று வியாழக்கிழமை (4) விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரல் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு தெரிவித்தார்.

தொழில் முயற்ச்சியாளர்களின் எதிர்கால கனவை நனவாக்குவதற்கு தேவையான தொழில் நுட்ப அறிவை வழங்குவதற்கான நிலையமாக இது செயற்படவுள்ளது. அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகமும் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் வலுவான பிராந்திய பொருளாதார வளர்ச்சி உயர்த்துவதற்கு பெறுமதி சேர் பொருட்களின் தரம் மற்றும் செயல்திறன் மதிப்பீடு, வணிகத் திட்ட வழிகாட்டுதல், சந்தை இணைப்பு உதவிகள், தயாரிப்பு சோதனைகள், பேக்கேஜிங் வழிகாட்டுதல், லேபிளிங் மற்றும் பிராண்டிங் ஆலோசனை வழங்கள், தொழில் முனைவோருக்கான பயிற்சி திட்டங்கள் போன்ற பல தரப்பட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களின் தரம் மற்றும் இரசாயண உள்ளடக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அதிகளவு பணம் செலுத்தி கொழும்பு போன்ற பிரதேசங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இவ் அரசாங்கத்தினால் 3வது இங்குபேசன் நிலையத்தினை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல மில்லியன் பெறுமதியான நவீன சாதனங்கள் மூலம் பல தரப்பட்ட சேவைகள் வழங்கப்பட வுள்ளன.

இவ் இங்குபேசன் நிலையத்தினால் பெறுமதி சேர் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனைகள், தொடக்கநிலை நிறுவனங்கள், இளைஞர் தொழில்முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்தும் மையமாக செயற்படவுள்ளதுடன் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு பாரிய சேவை வழங்கவுள்ளது என்றார்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் பி.பிரதீபன் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம்.நவவீ மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பேராசிரியர் கே.பிறேம்குமார், விதாதா நிறுவனத்தின் பணிப்பாளர் மனோஜ் கருணாரத்ன, கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடாதிபதி டுலங்க மேனிக்கே குணுபோலகம, கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் அமரசிங்கம் பகீரதன், விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் உத்தியோகத்தர்கள், விதாதா நிறுவன உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்புள்ளையில் காலாவதியான குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற வர்தகருக்கு அபராதம்!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு திராய்மடுவில் வீடொன்றில் தீ பரவல்!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசுக்கு 44 கோடி ரூபா இலாபம்!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

துபாய் – சார்ஜாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் 8 சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube