Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

தரவளை பாலம் சீரமைப்பில் தாமதம்; மக்கள் அவதி!

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹட்டன் – டிக்கோயா தரவளை மேற்பிரிவுக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள பாலம் பல மாதங்களாக சேதமடைந்த நிலையிலேயே காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது மக்கள் போக்குவரத்திற்காக மரம் மற்றும் மூங்கிலால் அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தால், இந்த தற்காலிக பாலமும் நீரில் அடித்துச் செல்லப்படும் அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பாதை முழுவதும் சேறும் சகதியுமாக மாறுவதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும், தொழிலுக்குச் செல்லும் பெரியவர்களும் தினமும் ஆபத்தான சூழ்நிலையில் இந்தப் பாதையை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இப்பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும், தங்களது பிரச்சினை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மற்றும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ். சிறுமி வைஷாலி வழக்கில் பொலிஸாருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞன் கைது!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டமும், போக்குவரத்து சேவையும் பொலிசாரால் ஏற்பாடு!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் 4 குற்றவாளிகளினதும் மரணதண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

வைகாசி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube