Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சரித் அபேசிங்கவுக்கு பிணை!

ஆடி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஆரம்பத்தில் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரனை தொகுதி முன்னாள் அமைப்பாளர் சரித் அபேசிங்க, உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததையடுத்து இன்று (30) வியாழக்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித்த ராஜபக்‌ஷ, சரித் அபேசிங்க மற்றும் இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருண ஸ்ரீ வருஷஹென்னடிகே ஆகிய மூவருக்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (28) பிணை அனுமதி வழங்கியது.

நீதிமன்ற உத்தரவையடுத்து ரகித்த ராஜபக்‌ஷ மற்றும் அருண ஸ்ரீ வருஷஹென்னடிகே ஆகியோர் அன்றைய தினமே பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து விடுதலையாகினர்.

எனினும், சரித் அபேசிங்கவால் அன்றைய தினம் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போனதால், அவர் மீண்டும் சிறைக்காவலில் வைக்கப்பட்டார். இன்றைய தினம் அந்நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரரான ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக்க விக்ரமரத்னவை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலிலிருந்து விடுவித்து, பாதுகாப்பான சிறைக்கு மாற்றுவதற்கு வசதி செய்து தருவதாகக் கூறி, அவரது மனைவியிடம் இருந்து ரூ. 120 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூலை 4 இல் சபரகமுவ பல்கலைக்கழக மருத்துவப் பீடம் திறப்பு!

ஆடி 3, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தனது போராட்டத்தை நிறைவு செய்தது!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்ல கட்டுப்பாடு!

வைகாசி 2, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தில் பட்டப்படிப்பை தொடரும் வாய்ப்பு!

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube