“ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் வேலைத்திட்டங்கள்” என்ற தொனிப்பொருளுக்கிணங்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், நுவரெலியா மாவட்டத்தின் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா கிராம சேவகர் பிரிவில் சுயத்தொழில் வேலைத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நோர்வுட் மற்றும் தலவாக்கலை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கிருஷ்ணன் கலைச்செல்வி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
அத்துடன், தலவாக்கலை , நோர்வூட் பிரதேச செயலாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சக்தி அமைப்பின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கால்நடை வளர்ப்பை ஊக்குவித்தல் மற்றும் நிலையான பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
